சூப்பர் 12 சுற்று: நெதர்லாந்துக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்


சூப்பர் 12 சுற்று: நெதர்லாந்துக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வங்காளதேசம்
x

வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது.

ஹோபர்ட்,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று (திங்கட்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஷகிப் அல்-ஹசன் தலைமையிலான வங்காளதேச அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்தை (குரூப்2) எதிர்கொள்கிறது.

ஹோபர்ட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்செய்தது. அதன்படி, வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது.

தொடக்க வீரராக களமிறங்கிய நஜ்முல் ஹுசேன் 25 ரன்களும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சௌமியா சர்கார் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். நெதர்லாந்து பந்துவீச்சாளர்கள் சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அணியில் அதிகபட்சமாக ஆபிப் ஹுசேன் 38 ரன்கள் எடுத்தார். இறுதியில் வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி விளையாடி வருகிறது.


Next Story