டி20 வரலாற்றில் 3-வது பந்து வீச்சாளராக சுனில் நரைன் படைத்த மாபெரும் சாதனை


டி20 வரலாற்றில் 3-வது பந்து வீச்சாளராக சுனில் நரைன் படைத்த மாபெரும் சாதனை
x

image courtesy: PTI 

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சுனில் நரைன் 1 விக்கெட் வீழ்த்தினார்.

கொல்கத்தா,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது. மழையால் 16 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 16 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சாவ்லா மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை 16 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைன் 1 விக்கெட் வீழ்த்தினார். இது டி20 போட்டிகளில் அவர் கைப்பற்றிய 550-வது விக்கெட்டாக பதிவானது. இதன் மூலம் டி20 வரலாற்றில் இந்த மைல்கல்லை கடந்த 3-வது பந்து வீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை சுனில் நரைன் படைத்துள்ளார். இதற்கு முன்ன்னர் பிராவோ மற்றும் ரஷித் கான் ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

அந்த பட்டியல்:-

1. பிராவோ - 625 விக்கெட்டுகள்

2. ரஷித் கான் - 574 விக்கெட்டுகள்

3. சுனில் நரைன் - 550 விக்கெட்டுகள்


Next Story