தென்ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக்; புதிய கிரிக்கெட் அணியை வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்
தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த 20 ஓவர் லீக் கிரிக்கெட் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கி உள்ளது.
சென்னை,
ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென்ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் நடக்கும் இந்த போட்டியையொட்டி உருவாக்கப்பட்ட 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.
அந்த வகையில் ஜோகன்னஸ்பர்க்கை அடிப்படையாக கொண்டு உதயமாகும் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிர்வாகம் வாங்கியுள்ளது.
இதே போல் கேப்டவுன் அணி, மும்பை இந்தியன்சுக்கும், டர்பன் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுக்கும், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணி ஐதராபாத் சன்ரைசர்சுக்கும், பார்ல் அணி ராஜஸ்தான் ராயல்சுக்கும், பிரிட்டோரியா அணி டெல்லி கேப்பிட்டல்சுக்கும் சொந்தமாகிறது.
.ஐ.பி.எல். போன்றே தென்ஆப்பிரிக்கா 20 ஓவர் லீக்கிலும் 4 வெளிநாட்டு வீரர்கள் களம் காண அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. ஆனால் இந்த போட்டியில் இந்திய வீரர்கள் விளையாட வாய்ப்பில்லை.