பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராகிறார் கங்குலி
பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக கங்குலி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலியின் பதவி காலம் அடுத்த வாரத்துடன் நிறைவடைகிறது. பதவி நீட்டிப்பை எதிர்பார்த்த நிலையில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் கங்குலி மீண்டும் பெங்கால் கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் வருகிற 22-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். 'பெங்கால் கிரிக்கெட் சங்கத்தில் நான் 5 ஆண்டுகள் பொறுப்பில் இருந்துள்ளேன். லோதா கமிட்டி விதிமுறைப்படி மேலும் 4 ஆண்டுகள் பதவியில் இருக்க முடியும்' என்று கங்குலி குறிப்பிட்டார். அவர் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story