டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மெதுவான அரைசதம் - மோசமான பட்டியலில் இணைந்த சூர்யகுமார் யாதவ்


டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மெதுவான அரைசதம் - மோசமான பட்டியலில் இணைந்த சூர்யகுமார் யாதவ்
x

Image Courtesy; @ICC

அமெரிக்காவுக்கு எதிரான வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

நியூயார்க்,

9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 'ஏ' பிரிவு ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, அமெரிக்காவை சந்தித்தது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய அமெரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. அமெரிக்கா தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் குமார் 27 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 111 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 111 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் சூர்யகுமார் யாதவ் 50 ரன்கள் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடிக்க 49 பந்துகள் எடுத்து கொண்டார். இதன் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மெதுவான அரைசதம் (பந்துகள் அடிப்படையில்) அடித்த வீரர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ் இணைந்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் மெதுவான அரைசதம் (பந்துகள் அடிப்படையில்):

முகமது ரிஸ்வான் (பாகிஸ்தான்) - 52 பந்துகள் (கனடாவிற்கு எதிராக) - 2024

டேவிட் மில்லர் (தென் ஆப்பிரிக்கா) - 50 பந்துகள் (நெதர்லாந்துக்கு எதிராக) - 2024

டெவான் ஸ்மித் (வெஸ்ட் இண்டீஸ்) - 49 பந்துகள் (வங்காளதேசத்திற்கு எதிராக) - 2007

டேவிட் ஹஸ்ஸி (ஆஸ்திரேலியா) - 49 பந்துகள் (இங்கிலாந்துக்கு எதிராக) - 2010

சூர்யகுமார் யாதவ் (இந்தியா) - 49 பந்துகள் (அமெரிக்காவுக்கு எதிராக) - 2024


Next Story