மழையால் கிரிக்கெட் போட்டிகள் பாதிக்கப்படாமல் இருக்க சுப்மன்கில் புது யோசனை...


மழையால் கிரிக்கெட் போட்டிகள் பாதிக்கப்படாமல் இருக்க சுப்மன்கில் புது யோசனை...
x

மழையால் போட்டி பாதிக்கப்படுவதை பார்க்கவே ரசிகர்களுக்கு மட்டுமின்றி தனக்கும் எரிச்சலாக இருப்பதாக சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.

ஹாமில்டன்,

இந்தியா-நியூசிலாந்து இடையிலான நேற்றைய ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதன் பிறகு இந்திய தொடக்க ஆட்டக்காரர் 23 வயதான சுப்மான் கில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"மழையால் ஆட்டம் ரத்தானது ஏமாற்றம் அளிக்கிறது. இதுபோன்ற சூழலில் மேற்கூரையுடன் கூடிய உள்ளரங்கு மைதானத்தில் போட்டி நடந்தால் நன்றாக இருக்கும். ஆனால் உள்ளரங்கு மைதானத்தில் போட்டியை நடத்துவது குறித்து கிரிக்கெட் வாரியங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.

களம் இறங்குவதும், பிறகு மழையால் வெளியேறுவதும் என இப்படி நிறைய ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்படுவதை பார்க்கவே ரசிகர்களுக்கு மட்டுமின்றி எனக்கும் எரிச்சலாக இருக்கிறது. ஆனால் இது பெரிய முடிவு (உள்ளரங்கில் ஆடுவது) என்பதால், எப்படி ஒரு நிலைப்பாட்டை நான் எடுக்க முடியும் என்பது எனக்கு தெரியவில்லை."

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story