காயத்துடன் அமர்ந்திருந்த ஷாஹீன் அப்ரிடி ..! நலம் விசாரித்த இந்திய அணி வீரர்கள்- வைரலாகும் வீடியோ


காயத்துடன் அமர்ந்திருந்த ஷாஹீன் அப்ரிடி ..! நலம் விசாரித்த இந்திய அணி வீரர்கள்- வைரலாகும் வீடியோ
x

இவர்கள் சந்தித்து பேசும் வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது

துபாய்,

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை தொடங்குகிறது, செப்டம்பர் 11 வரை நடைபெற உள்ளது.இந்த போட்டியில் மொத்தம் 6 நாடுகள் பங்கேற்கின்றன. . இந்த தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் காண்கிறது இந்தியா தனது முதல் போட்டியில் ஒரே பிரிவில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான் அணியுடன் 28-ந்தேதி துபாயில் லீக் சுற்றில் மோதுகிறது.. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதுகடந்த முறை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் விளையாடிய போது இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தது.

பாகிஸ்தான் இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி இம்முறை காயத்தால் இந்த ஆசிய கோப்பையிலிருந்து வெளியேறியுள்ளார். அவர் இந்த தொடரில் விலகியுள்ளது உண்மையாகவே பாகிஸ்தானுக்கு பின்னடைவாகும். இருப்பினும் அவரது அனுபவம் இதர பந்துவீச்சாளர்களுக்கு பயன்படும் என்பதற்காக காயத்தை சந்தித்தாலும் அவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்து கேப்டன் பாபர் அசாம் தங்கள் அணியுடன் அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே இடைவெளி இருப்பதால் இரு அணி வீரர்களும் துபாயில் தீவிரமான வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மைதானத்தில் பயிற்சி எடுத்து வரும் இவர்கள் பயிற்சிக்கு செல்லும்போதும் முடித்து விட்டு திரும்பும் போதும் ஒருவருக்கு ஒருவரை சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது.

அந்த வகையில் நேற்றைய தங்களது பயிற்சியை துவங்க மைதானத்துக்கு சென்ற இந்திய வீரர்கள் காயத்தால் அமர்ந்திருந்த ஷாஹீன் அப்ரிடியை பார்த்து இந்திய அணி நலம் விசாரித்தார்கள். குறிப்பாக இந்தியாவின் சுழல் பந்துவீச்சாளர் சாஹால் சிரித்த முகத்துடன் ஒருசில நிமிடங்கள் ஜாலியாக பேசி அவருடைய காயத்தின் நிலைமை பற்றி கேட்டறிந்தார்.

அடுத்ததாக விராட் கோலியும் அவருடன் கை கொடுத்து காயத்தை பற்றி கேட்டறிந்ததுடன் அதிலிருந்து விரைவில் குணமடைய சில ஆலோசனைகளையும் வழங்கினார்.மேலும் அதேபோல் ரிஷப் பண்ட் ஒருசில நிமிடங்கள் பேசி நலம் விசாரித்தார்.

இறுதியாக காயத்திலிருந்து குணமடைந்தது சமீபத்தில் அணியில் இணைந்துள்ள கேஎல் ராகுல் மிகவும் தீவிரமாக அவரது காயத்தை பற்றி கேட்டறிந்தார்.

இவர்கள் சந்தித்து பேசும் வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.



Next Story