இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஷாஹீன் அப்ரிடி விலகல்


இலங்கை அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து ஷாஹீன் அப்ரிடி விலகல்
x

கோப்புப்படம் 


இலங்கை அணியின் மஹீஷ் தீக்ஷனாவும் காயம் காரணமாக இப்போட்டியில் பங்கேற்க மாட்டார்.

கல்லே,

பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக அப்துல்லா ஷபீக் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 24-ந் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி காயம் காரணமாக விலகி உள்ளார். அவருக்கு பதிலாக ஹாரிஸ் ரவுஃப் களமிறங்குகிறார். இது அவருக்கு முதல் டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல இலங்கை அணியின் மஹீஷ் தீக்ஷனாவும் காயம் காரணமாக இப்போட்டியில் பங்கேற்க மாட்டார் என்பதை இலங்கை கிரிக்கெட் போர்ட் தெரிவித்தது.


Next Story