2023-ல் இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டிகளின் அட்டவணை..! சென்னை சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி - பிசிசிஐ


2023-ல் இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டிகளின் அட்டவணை..! சென்னை சேப்பாக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி - பிசிசிஐ
x

2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டுள்ளது.

இந்திய அணி, இலங்கை , நியூசிலாந்து ,ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக விளையாடவுள்ளது.அதன்படிஇலங்கைக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 போட்டியிலும் , நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள், 3 டி20 போட்டியிலும் , ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் , 3 ஒருநாள்போட்டியிலும் இந்திய அணி விளையாடவுள்ளது.

இதில் கடைசியாக நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது

இலங்கைக்கு எதிரான தொடர்:

முதல் டி20 போட்டி : ஜனவரி 3, மும்பை

2-வது டி20 போட்டி : ஜனவரி 5, புனே

3-வது டி20 போட்டி : ஜனவரி 7, ராஜ்கோட் .

முதல் ஒருநாள் போட்டி : ஜனவரி 10, கவுகாத்தி ,

2-வது போட்டி : போட்டி ஜனவரி 12, கொல்கத்தா

3-வது போட்டி : ஜனவரி 15, திருவனந்தபுரம் .

நியூசிலாந்துக்கு எதிரான தொடர் :

முதல் டி20 போட்டி: ஜனவரி 18 , ஹைதராபாத்

2-வது டி20 போட்டி : ஜனவரி 21, ராய்பூர்

3-வது டி20 போட்டி : ஜனவரி 24, இந்தூர்

முதல் ஒருநாள் போட்டி : ஜனவரி 27,

ராஞ்சி 2-வது ஒருநாள் போட்டி : ஜனவரி 29, லக்னோ

3-வது ஒருநாள்: பிப்ரவரி 1, அகமதாபாத்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் :

முதல் டெஸ்ட்: பிப்ரவரி 9-13, நாக்பூர்

2-வது டெஸ்ட்: பிப்ரவரி 17-21,டெல்லி

3-வது டெஸ்ட்: மார்ச் 1-5, தர்மசாலா

4-வது டெஸ்ட்: மார்ச் 9-13, அகமதாபாத்

முதல் ஒருநாள்: மார்ச் 17, மும்பை

2-வது ஒருநாள்: மார்ச் 19, விசாகப்பட்டினம்

3-வது ஒருநாள்: மார்ச் 22, சென்னை .


Next Story