பெற்றோரான குருணல் பாண்டியா தம்பதிக்கு சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து


பெற்றோரான குருணல் பாண்டியா தம்பதிக்கு சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து
x
தினத்தந்தி 25 July 2022 2:26 PM IST (Updated: 25 July 2022 4:21 PM IST)
t-max-icont-min-icon

இந்திய கிரிக்கெட் ஆல்ரவுண்டர் குருணல் பாண்டியா மற்றும் அவரது மனைவி பங்குரி பெற்றோர் ஆனதற்கு சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.



புனே,



இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் கலக்கி வரும் ஆல்ரவுண்டர் குருணல் பாண்டியா. குருணல் பாண்டியாவின் மனைவி பன்குரி சர்மா. இவர்கள் இருவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பரில் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் குருணல் பாண்ட்யா மற்றும் பன்குரி சர்மா தம்பதிக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. அவர்கள் தங்களது குழந்தைக்கு கவிர் குருணல் பாண்ட்யா என பெயரிட்டு உள்ளனர்.

இதனையடுத்து, தனது குழந்தைக்கு முத்தமிடுவது போன்றும், குழந்தையை மனைவி கையில் வைத்திருப்பது போன்றும் உள்ள புகைப்படம் ஒன்றை குருணல் பாண்ட்யா டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

இதுபற்றி சச்சின் தெண்டுல்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உங்கள் இருவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். பெற்றோராக உங்களது பயணம் சிறக்கவும் வாழ்த்துகிறேன். கவிருக்கு கடவுள் ஆசியும்,நிறைய அன்பும் கிடைக்கட்டும் என வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இதேபோன்று, நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்கும், குருணல் தம்பதியை வாழ்த்தி உள்ளார். கிரிக்கெட் வீரரான குருணலின் சகோதரர் ஹர்திக் பாண்ட்யாவும் இந்த தம்பதியை வாழ்த்தி உள்ளார்.


Next Story