ஆஸ்கர் விருது வென்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடிகர்களுடன் நடனமாடிய சச்சின் ... வீடியோ வைரல்
மும்பையில் இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் தொடரின் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது.
மும்பை,
மும்பையில் இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (ஐ.எஸ்.பி.எல்.) என்ற உள்ளூர் தொடர் இந்த வருடம் முதல் நடைபெற உள்ளது. இது 10 ஓவர்கள் கொண்ட போட்டி தொடராகும். இதன் தொடக்க விழா மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
இதில் பல சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் இதன் தொடக்க விழாவில் ஆஸ்கர் விருது வென்ற ' நாட்டு நாட்டு' பாடலுக்கு நடிகர்கள் ராம் சரண், சூர்யா, அக்சய் குமார் ஆகியோருடன் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் இணைந்து நடனமாடினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Related Tags :
Next Story