இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எம்.எஸ். தோனியின் வாழ்நாள் சாதனையை தகர்த்த ரோகித் சர்மா


இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எம்.எஸ். தோனியின் வாழ்நாள் சாதனையை தகர்த்த  ரோகித் சர்மா
x

டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

நியூயார்க்,

9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 8-வது லீக் ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மா தலைமையில் இந்தியா பதிவு செய்த 43-வது வெற்றியாகும். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற எம்.எஸ். தோனியின் (42 வெற்றிகள்) வாழ்நாள் சாதனையை தகர்த்த ரோகித் புதிய சாதனை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1. ரோகித் சர்மா - 43 வெற்றிகள்

2. எம்.எஸ்.தோனி - 42 வெற்றிகள்

3. விராட் கோலி - 32


Next Story