டெல்லி பிரீமியர் லீக் தொடரில் பந்துவீசிய ரிஷப் பண்ட் - வீடியோ
டெல்லி பிரிமீயர் லீக் தொடரின் முதல் சீசன் டெல்லியில் நேற்று தொடங்கியது.
டெல்லி,
டெல்லி பிரிமீயர் லீக் தொடரின் முதல் சீசன் டெல்லியில் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான பூரணி டெல்லி, ஆயுஷ் பதோனி தலைமையிலான தெற்கு டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பூரணி டெல்லி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 197 ரன்கள் குவித்தது. பூரணி டெல்லி தரப்பில் அர்பித் ராணா 59 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 198 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தெற்கு டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் அணி 19.1 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 198 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் தெற்கு டெல்லி சூப்பர் ஸ்டார்ஸ் வெற்றி பெற கடைசி 6 பந்தில் 1 ரன் தேவைப்பட்ட போது பூரணி டெல்லி தரப்பில் அந்த ஓவரை முன்னணி வீரரான ரிஷப் பண்ட் வீசினார். விக்கெட் கீப்பர் மற்றும் இடது கை பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் வலது கையை பயன்படுத்தி பந்துவீசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.