ஐ.சி.சி.யின் மதிப்புமிக்க அணியில் ரிச்சா கோசுக்கு இடம்


ஐ.சி.சி.யின் மதிப்புமிக்க அணியில் ரிச்சா கோசுக்கு இடம்
x

image courtesy: ICC via ANI

ஐ.சி.சி. அறிவித்துள்ள 11 பேர் கொண்ட மதிப்புமிக்க அணியில் இந்திய தரப்பில் இளம் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் இடம் பிடித்துள்ளார்.

துபாய்,

8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் கோப்பையை ருசித்தது. முன்னதாக இந்திய அணி அரைஇறுதியில் போராடி தோல்வியை தழுவியது.

இந்த தொடரில் கலக்கிய வீராங்கனைகளின் அடிப்படையில் மிகவும் மதிப்பு மிக்க அணியை தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்தது. 11 பேர் கொண்ட இந்த அணியில் இந்திய தரப்பில் இளம் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் மட்டுமே இடம் பிடித்துள்ளார். அவர் தொடரில் 136 ரன்கள் எடுத்ததுடன், 7 பேரை அவுட் ஆக்கி இருக்கிறார்.

ஐ.சி.சி.யின் மதிப்பு மிக்க அணி வருமாறு:-

தஸ்மின் பிரிட்ஸ் (தென்ஆப்பிரிக்கா), அலிசா ஹீலி (ஆஸ்திரேலியா), வோல்வோர்த் (தென்ஆப்பிரிக்கா), நாட் சிவெர் (இங்கிலாந்து, கேப்டன்), ஆஷ்லி கார்ட்னெர் (ஆஸ்திரேலியா), ரிச்சா கோஷ் (இந்தியா), சோபி எக்லெஸ்டன் (இங்கிலாந்து), கரிஷ்மா ராம்ஹராக் (வெஸ்ட் இண்டீஸ்), ஷப்னிம் இஸ்மாயில் (தென்ஆப்பிரிக்கா), டார்சி பிரவுன், மேகன் ஸ்கட் (இருவரும் ஆஸ்திரேலியா), 12-வது வீராங்கனை: பிரேன்டர்காஸ்ட் (அயர்லாந்து).


Next Story