மழையால் ஓவர்கள் குறைப்பு.. இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு


மழையால் ஓவர்கள் குறைப்பு.. இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு
x

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 4-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

லண்டன்,

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் அங்கு மழை பெய்ததன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.

பின்னர் மழை நின்றதையடுத்து சுமார் 1 மணி நேம் தாமதமாக டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

இந்நிலையில் அங்கு மீண்டும் மழை பெய்வதன் காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


Next Story