முதல் பிளே ஆப் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவதில் சிக்கல் ? - இது தான் காரணமா ..!!


முதல் பிளே ஆப் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவதில் சிக்கல் ? - இது தான் காரணமா ..!!
x

Image Courtesy : Twitter / IPL 

நாளை மறுதினம் நடைபெறும் முதல் பிளே ஆப் போட்டியில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

மும்பை,

ஐபிஎல் 15-வது சீசனின் கடைசி லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. பிளே ஆப் சுற்றுக்கு ஏற்கனவே குஜராத், லக்னோ, ராஜஸ்தான் , பெங்களூரு அணிகள் தகுதி பெற்றுவிட்டன.

நாளை மறுதினம் நடைபெறும் முதல் பிளே ஆப் போட்டியில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் கொல்கத்தாவில் உருவான புயல் காரணமாக அங்கு கடும் மழை பெய்தது. இதில் ஈடன் கார்டன் மைதானத்தின் முக்கிய பகுதி சேதமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பலத்த காற்று மற்றும் இடியுடன் மழை பெய்ததால் மைதானத்தின் பிட்ச் மூடப்பட்டு இருந்த "கவர்ஸ்"-களும் காற்றில் பறந்ததாக தெரிகிறது. அதுமட்டுமின்றி மோசமான வானிலை காரணமாக குஜராத் அணி திட்டமிடப்பட்ட நேரத்தில் கொல்கத்தா சென்று சேர்வதில் தாமதம் ஏற்பட்டது.

மழைக்காரணமாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நேற்று மாலை மைதானத்தை நேரில் சென்று பார்வையிட்டார். பிசிசிஐ தரப்பில் போட்டி நடைபெறும் நாளுக்கு முன்னதாக மைதானம் தயார் நிலையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் மழை தொடரும் பட்சத்தில் போட்டி நடைபெறுவது கேள்விக் குறியாகும். இதனால் போட்டி தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளது.


Next Story