கனவா, நிஜமா.. என்னையே நான் கிள்ளிப்பார்த்தேன்: மும்பை அணி ஏலத்தில் எடுத்தது குறித்து கூறுகிறார் கேமரூன் கிரீன்


கனவா, நிஜமா.. என்னையே நான் கிள்ளிப்பார்த்தேன்: மும்பை அணி ஏலத்தில் எடுத்தது குறித்து கூறுகிறார் கேமரூன் கிரீன்
x

ஆஸ்திரேலியாவின் திறமையான இளம் ஆல்ரவுண்டராக வலம் வரும் கேம்ரூன் கிரீனை 17.50 கோடி கொடுத்து மும்பை அணி ஏலத்தில் எடுத்தது.

கொச்சி,

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் விடுவிக்கப்பட்ட வீரர்களுக்குரிய இடத்தை நிரப்புவதற்காக ஐ.பி.எல். வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடைபெற்றது .

ஐபிஎல்-லில் அதிக கோப்பைகளை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, ஆஸ்திரேலியாவின் திறமையான இளம் ஆல்ரவுண்டராக வலம் வரும் கேம்ரூன் கிரீனை 17.50 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது.

மும்பை அணி தன்னை ஏலத்தில் எடுத்தது குறித்து கேமரூன் கிரீன் கூறும்போது, உண்மையில் மும்பை இந்தியன்ஸ் அணி என்னை ஏலத்தில் எடுத்ததை என்னால் நம்பமுடியவில்லை. என்னையே ஒருமுறை நான் கிள்ளிப்பார்த்தேன். அந்த அளவுக்கு எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

"மும்பை இந்தியன்ஸ் அணி, ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மிகப்பெரிய அணியாகும் அந்த அணியில் பும்ரா, சூர்யகுமார் யாதவ் போன்ற திறமையான வீரர்கள் உள்ளனர். அவர்களுடன் நான் இணைவது மிகப்பெரிய ஒன்றாகும். அடுத்த ஆண்டு அங்கு செல்வதற்கு என்னால் காத்திருக்க முடியாது, இவ்வாறு அவர் கூறினார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட 2வது வீரர் என்ற சிறப்பை கேம்ரூன் கிரீன் பெற்றார் . முதல் இடத்தில் சாம் கரண் இருக்கிறார். அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி 18.50 கோடிக்கு ஏலம் எடுத்தது. 2வது இடத்தில் கேம்ரூன் கிரீன் இருக்கிறார். பென் ஸ்டோக்ஸ் 16.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story