"ரிஷப் பண்ட் தான் விக்கெட் கீப்பர்களின் பிரையன் லாரா" - பாக். முன்னாள் வீரர் பாராட்டு..!!


ரிஷப் பண்ட் தான் விக்கெட் கீப்பர்களின் பிரையன் லாரா - பாக். முன்னாள் வீரர் பாராட்டு..!!
x

Image Courtesy : AFP

ரிஷப் பண்ட்-க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பர்மிங்காம்,

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 416 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிரடியாக விளையாடிய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சதம் அடித்து அசத்தினார். அவர் 111 பந்தில் 146 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதன் மூலம் அவர் பல்வேறு சாதனைகளை படைத்தார்.

இந்த நிலையில் அவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் பாராட்டு தெரிவித்துள்ளார். ரிஷப் பண்ட் குறித்து அவர் கூறியதாவது :

அவர் விக்கெட் கீப்பர்களின் பிரையன் லாரா. வார்விக்ஷயர் அணிக்காக பிரையன் லாரா 501 ரன்கள் குவித்த அதே இடமான பர்மிங்காமில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. பண்ட் இன்று அந்த போட்டியின் காட்சிகளைக் கண் முன் கொண்டுவந்துள்ளார். அவர் பேட்டிங்கின் போது குறைந்த கால் அசைவைக் கொண்டிருக்கிறார். இருப்பினும் பந்தை நன்றாக எதிர்கொள்கிறார். ஜடேஜாவயும் பாராட்ட விரும்புகிறேன். பொதுவாக, இதுபோன்ற நேரங்களில் மறுமுனையில் பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழப்பார்கள். ஆனால் அவர் சிறப்பாக விளையாடினார்.

இவ்வாறு ரஷீத் லத்தீப் தெரிவித்தார்.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 84 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. 3- வது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.


Next Story