பாகிஸ்தான் முன்னணி வீரரின் மத்திய ஒப்பந்தம் நிறுத்தம்


பாகிஸ்தான் முன்னணி வீரரின் மத்திய ஒப்பந்தம் நிறுத்தம்
x

image courtesy; AFP

வரும் ஜூன் 30 முதல் எந்த ஒரு வெளிநாட்டு லீக் தொடர்களிலும் பங்கேற்க இவருக்கு அனுமதி (என்ஒசி) வழங்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.

கராச்சி,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த டிசம்பர் முதல் ஜனவரி வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் தொடரை இழந்து ஒயிட்வாஷ் ஆனது.

பாகிஸ்தான் அணியின் இந்த தோல்விக்கு அனுபவம் இல்லாத வேகப்பந்து வீச்சு கூட்டணி முக்கிய காரணமாக அமைந்தது. ஏனெனில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான நசீம் ஷா மற்றும் ஹரிஸ் ரவூப் இந்த தொடரில் பங்கேற்கவில்லை.

இதில் ஹரிஸ் ரவூப் இந்த தொடரின் அணித்தேர்வுக்கு முன்னதாக கடைசி நேரத்தில் பனிச்சுமையால் தன்னால் பங்கேற்க முடியாது என விலகினார்.

இதனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிபிசி) ஏற்க மறுத்தது. மேலும் அவர் மீது விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது. இந்த விசாரணையின்போதும் ஹரிஸ் ரவூப்பின் பதில் பிபிசி-க்கு திருப்திகரமாக இல்லை. எனவே அவரது மத்திய ஒப்பந்தத்தை நிறுத்தியுள்ளது. மேலும் ஜூன் 30 வரை எந்த வித வெளிநாட்டு லீக் போட்டிகளிலும் பங்கேற்க அவருக்கு அனுமதி (என்ஒசி) வழங்க மறுத்துள்ளது.

இந்த இடைப்பட்ட காலத்தில் இவர் பிக்பாஷ் லீக் போட்டிகளில் பங்கேற்க பிபிசி அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story