இன்னிங்ஸ் ஒன்று...சாதனைகள் பல..இந்திய வீரர் ஜெய்ஸ்வால் அபாரம்


இன்னிங்ஸ் ஒன்று...சாதனைகள் பல..இந்திய வீரர் ஜெய்ஸ்வால் அபாரம்
x

image courtesy; PTI

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

விசாகப்பட்டினம்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 396 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

இதன் மூலம் ஜெய்ஸ்வால் பல சாதனைகள் படைத்துள்ளார். அவைகள்

1. இந்திய அணிக்காக குறைந்த இன்னிங்ஸ்களில் இரட்டை சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 5-வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்;-

1. கருண் நாயர் - 3 இன்னிங்ஸ்

2.வினோத் காம்ப்ளி - 4 இன்னிங்ஸ்

3. சுனில் கவாஸ்கர்/ மயங் அகர்வால் - 8 இன்னிங்ஸ்

4. புஜாரா - 9 இன்னிங்ஸ்

5. ஜெய்ஸ்வால் - 10 இன்னிங்ஸ்

2. இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் குறைந்த வயதில் இரட்டை சதம் அடித்த 4-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அந்த பட்டியல்;-

1. வினோத் காம்ப்ளி - 21 வருடங்கள் 35 நாட்கள்

2. வினோத் காம்ப்ளி - 21 வருடங்கள் 55 நாட்கள்

3. சுனில் கவாஸ்கர்- 21 வருடங்கள் 283 நாட்கள்

4. ஜெய்ஸ்வால் - 22 வருடங்கள் 37 நாட்கள்

3. இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த 4-வது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

அந்த பட்டியல்;-

1. கங்குலி

2. வினோத் காம்ப்ளி ( 2 முறை)

3. கவுதம் கம்பீர்

4. ஜெய்ஸ்வால்


Next Story