டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்துக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த ஓமன்


டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்துக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த ஓமன்
x

ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஓமன் 150 ரன்கள் சேர்த்துள்ளது.

அண்டிகுவா,

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில், அண்டிகுவாவில் இன்று நடைபெற்றுவரும் 20வது லீக் ஆட்டத்தில் ஓமன் - ஸ்காட்லாந்து மோதி வருகின்றன.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஓமன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க வீரர்களாக பிரதிக் அத்வாலே, நசீம் களமிறங்கினர். நசீம் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கேப்டன் இலியாஸ் 16 ரன்களிலும், மசூத் 3 ரன்னிலும், கலித் கலி 5 ரன்னிலும் ஆட்டமிழந்தார். ஆனால் தொடக்க வீரர் அத்வாலே பொறுப்புடன் ஆடி 54 ரன்கள் சேர்த்தார். பின்னர் களமிறங்கிய ஆயன் கான் 41 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் ஓமன் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. ஸ்காட்லாந்து தரப்பில் அந்த அணியின் ஷெரிப் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் ஸ்காட்லாந்து களமிறங்கி விளையாடி வருகிறது.


Next Story