ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: புதிய கேப்டன் தலைமையில் அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணி


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: புதிய கேப்டன் தலைமையில் அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணி
x

Image courtesy: AFP

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன்,

ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் டி20 தொடர் இன்றுடன் நிறைவடைய உள்ளது.

அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகிய இங்கிலாந்து வெள்ளைப்பந்து (டி20 மற்றும் ஒருநாள்) அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் ஒருநாள் தொடரிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக புதிய கேப்டன் ஹாரி புரூக் தலைமையில் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி விவரம் பின்வருமாறு:-

ஹாரி புரூக் (கேப்டன்), ஜோப்ரா ஆர்ச்சர், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஜோர்டான் காக்ஸ், பென் டக்கெட், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், மேத்யூ பாட்ஸ், அடில் ரஷித், பில் சால்ட், ஜேமி ஸ்மித், ஆலி ஸ்டோன், ரீஸ் டாப்லி, ஜான் டர்னர்.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story