ஒருநாள் போட்டி: இங்கிலாந்துக்கு எதிராக வங்கதேசம் எடுத்த டிஆர்எஸ் - ட்ரோல் செய்யும் கிரிக்கெட் ரசிகர்கள்...!


ஒருநாள் போட்டி: இங்கிலாந்துக்கு எதிராக வங்கதேசம் எடுத்த டிஆர்எஸ் - ட்ரோல் செய்யும் கிரிக்கெட் ரசிகர்கள்...!
x

வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது.

டாக்கா,

வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதலாவது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்தது.

அந்த அணி தரப்பில் ராய் 132 ரன், பட்லர் 76 ரன், மொயீன் அலி 42 ரன், சாம் கர்ரண் 33 ரன் எடுத்தனர். இதையடுத்து 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்கதேச அணி 122 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்யும் போது ஆட்டத்தின் 48 வது ஓவரை டஸ்கின் அகமது வீசினார். அப்போது அவர் வீசிய பந்தை அடில் ரஷித் எதிர்கொண்டார். அபாரமாக டஸ்கின் வீசிய யார்க்கர் பந்தை அடில் ரஷித் தனது பேட்டின் நடுப்பகுதியால் தடுத்து ஆடினார். ஆனால் அதற்கு வங்கதேச அணியினர் டிஆர்எஸ் முறையில் அப்பீல் செய்தனர்.

டிஆர்எஸ் முறையில் பந்து பேட்டின் நடுப்பகுதியில் படுவது தெளிவாக தெரிந்தது. இதையடுத்து அவர் நாட் அவுட் என முடிவு வந்தது. தற்போது பேட்டின் நடுப்பகுதியில் பந்தை தடுத்து ஆடியதற்கு வங்கதேச அணியினர் டிஆர்எஸ் முறையில் அப்பீல் செய்ததை சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.






Next Story