'அடுத்த முறை உனக்கு பந்துவீச்சு கிடையாது, பேட்டிங் மற்றும் பீல்டிங் மட்டுமே'- தோனியுடனான உரையாடலை பகிர்ந்த தீக்ஷனா
ஐ.பி.எல். தொடரில் சென்னை அணிக்காக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனா விளையாடி வருகிறார்.
கொழும்பு,
இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல்-ன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதில் சென்னை அணிக்காக இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனா விளையாடி வருகிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. மேலும் ஐ.பி.எல். தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியின் சாதனையையும் சமன் செய்தது.
இந்நிலையில் அந்த வெற்றிக்கு பிறகு தோனியுடன் நடந்த சுவாரஸ்யமான உரையாடலை தீக்ஷனா பகிர்ந்துள்ளார். அதில்,
'கடந்த ஐபிஎல் சீசனில் குஜராத் அணிக்கு எதிரான இறுதிப்போட்டி வெற்றிக்கு பிறகு, நானும் பத்திரனாவும் உடனடியாக இலங்கை திரும்ப வேண்டியிருந்தது. இறுதிப்போட்டிக்குப் பிறகு, சிஎஸ்கே தரப்பில் விருந்து வைக்கப்பட்டது. அதில் இருந்து நாங்கள் விடைபெற இருந்தபோது கேப்டன் தோனியை சந்திக்க சென்றோம். அப்போது அவர் என்னை கட்டியணைத்து அடுத்த முறை உனக்கு பந்துவீச்சு கிடையாது, பேட்டிங் மற்றும் பீல்டிங் மட்டுமே" என்று கூறினார்.