ஜேம்ஸ் ஆண்டர்சனை எப்போதும் போட்டியாக நினைப்பதில்லை - ஜஸ்ப்ரீத் பும்ரா


ஜேம்ஸ் ஆண்டர்சனை எப்போதும் போட்டியாக நினைப்பதில்லை - ஜஸ்ப்ரீத் பும்ரா
x

Image Courtesy: AFP

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 106 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

விசாகப்பட்டினம்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2-வது போட்டி விசாகப்பட்டினத்தில் கடந்த 2ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்தை 106 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஜஸ்ப்ரீத் பும்ரா (இரு இன்னிங்சையும் சேர்த்து 9 விக்கெட்) ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ஏற்கனவே சொன்னது போல் நான் சாதனைகளை பார்ப்பதில்லை. இளமையாக இருந்த போது அது எனக்கு ஆர்வத்தை கொடுத்தது. ஆனால் தற்போது அதுவும் விளையாட்டில் ஒரு பகுதியாகும். இளம் வீரராக முதலில் நான் யார்க்கர் பந்துகளை வீச கற்றுக் கொண்டேன். குறிப்பாக வகார் யூனிஸ், வாசிம் அக்ரம், ஜாகீர் கான் போன்ற ஜாம்பவான்களை நான் பார்த்துள்ளேன்.

நாங்கள் அடுத்த தலைமுறையை நோக்கி நகர்வதால் எங்களின் இளம் வீரர்களுக்கு உதவி செய்யும் வேலை என்னுடையது. ரோகித் சர்மாவுடன் நீண்ட காலமாக விளையாடுகிறேன். ஜேம்ஸ் ஆண்டர்சனை எப்போதும் போட்டியாக நினைப்பதில்லை. கிரிக்கெட்டுக்கு முன்பாக நான் வேகப்பந்து வீச்சின் ரசிகன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story