டி20 உலகக்கோப்பையில் அதிக விக்கெட்: ஸ்டெயின் சாதனையை முறியடித்த நோர்ட்ஜே


டி20 உலகக்கோப்பையில் அதிக விக்கெட்: ஸ்டெயின் சாதனையை முறியடித்த நோர்ட்ஜே
x

Image Courtesy: AFP

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

செயிண்ட் லூசியா,

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் அன்ரிச் நோர்ட்ஜே ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஸ்டெயின் சாதனையை முறியடித்துள்ளார். தென்ஆப்பிரிக்கா வீரரான டேல் ஸ்டெயின் டி20 உலக கோப்பை போட்டிகளில் 30 விக்கெட்டுக்களை எடுத்து இருந்தார். தற்போது நோர்ட்ஜே 31 விக்கெட்டுகளுடன் அவரை முந்தியுள்ளார்.

இந்த போட்டியில், அன்ரிச் நோர்ஜே 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். தற்போது நடைபெற்று வரும் தொடரில் இதுவரை அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டி20 உலகக் கோப்பையில் அன்ரிச் நோர்ட்ஜே 16 போட்டிகளில் 31 விக்கெட்டுகளும், டேல் ஸ்டெய்ன் 23 போட்டிகளில் 30 விக்கெட்டுகளும், மோர்னே மோர்கல் 17 போட்டிகளில் 24 விக்கெட்டுகளும், ரபாடா 19 போட்டிகளில் 24 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.



Next Story