சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்தியாவின் மிதாலி ராஜ் ஓய்வு


சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இந்தியாவின் மிதாலி ராஜ் ஓய்வு
x

Image Courtesy : AFP 

மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் எண்ணற்ற பல சாதனைகளை படைத்துள்ளார்.

மும்பை,

அனைத்து வடிவிலான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் (வயது 39) இன்று அறிவித்துள்ளார். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ள மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் எண்ணற்ற பல சாதனைகளை படைத்துள்ளார்.

அயர்லாந்து அணிக்கு எதிராக 1999 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு அறிமுகமாகிய மிதாலி, பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையுடன் ஓய்வு பெற்றுள்ளார். இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 232 போட்டிகளில் 7805 ரன்களை மிதாலி ராஜ் குவித்துள்ளார்.



இவரது தலைமையின் கீழ் இந்திய அணி 2017 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை முன்னேறியது. தனது டுவிட்டர் பக்கத்தில் ஓய்வு முடிவை அறிவித்துள்ள அவர் பதிவிட்டுள்ளதாவது, "பல ஆண்டுகளாக உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. உங்கள் ஆசிர்வாதத்துடனும் ஆதரவுடனும் எனது 2வது இன்னிங்ஸை எதிர்நோக்குகிறேன்" என பதிவிட்டுள்ளார்.


Next Story