ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை..!


ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை..!
x

Image Courtesy: AFP 

தினத்தந்தி 3 Sept 2022 2:30 PM IST (Updated: 3 Sept 2022 2:31 PM IST)
t-max-icont-min-icon

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை படைத்துள்ளார்.

டவுன்ஸ்வில்லி,

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஜிம்பாப்வே அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. அதில் முதலாவது மற்றும் 2-வது ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்று பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் தொடரில் 3-வது மற்றும் கடைசி ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.

இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 1 விக்கெட் எடுத்தார். இந்த விக்கெட்டின் மூலம் ஒரு நாள் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஸ்டார்க் படைத்தார். அவர் தனது 102-வது ஒரு நாள் போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

இதன் மூலம் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக்கின் சாதனையை முறியடித்து முதல் இடத்துக்கு முன்னேறினார். 2-வது இடத்த்தில் பாகிஸ்தான் வீரர் முஷ்டாக் உள்ளார். அவர் 104 போட்டிகளில் இந்த சாதனையை படைத்துள்ளார்.

அதற்கு அடுத்த படியாக ஆஸ்திரேலியாவின் பிரட் லீ 3-வது இடத்திலும் (112 போட்டிகள்), தென் ஆப்பிரிக்காவின் ஆலன் டொனால்ட் 4-வது இடத்திலும் (117 போட்டிகள்), பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனிஸ் 5-வது இடத்திலும் (118 போட்டிகள்), ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே 6-வது இடத்திலும் (125 போட்டிகள்) உள்ளனர்.


Next Story