இந்தியா - நியூசிலாந்து அரையிறுதி போட்டி குறித்து டெவலப்பர் மாநாட்டில் பேசிய மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்ய நாதெள்ளா


இந்தியா - நியூசிலாந்து அரையிறுதி போட்டி குறித்து டெவலப்பர் மாநாட்டில் பேசிய மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்ய நாதெள்ளா
x

கோப்புப்படம் 

அமெரிக்காவின் சியாட்டில் நகரில் 'இக்னைட் 2023 டெவலப்பர்' மாநாடு நடைபெற்றது.

சியாட்டில்,

நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்த ஆட்டத்தை பொறுத்தவரை, பேட்டிங்கில் ஸ்ரேயஸ் ஐயர், கோலி, கில் ஆகியோர் சிறந்த பங்களிப்பை அளித்த நிலையில், பந்துவீச்சில் முகமது ஷமி அசத்தினார்.

இந்த போட்டியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டு ரசித்தனர். இந்த நிலையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ சத்ய நாதெள்ளாவும் இந்த போட்டியை கண்டு ரசித்துள்ளார்.

சியாட்டிலில் நடைபெற்ற 'இக்னைட் 2023 டெவலப்பர்' மாநாட்டில் அவர் பேசியதாவது, "இந்தியா - நியூசிலாந்து இடையேயான உலக கோப்பை அரையிறுதி போட்டியை காண நான் இரவு முழுவதும் விழித்திருந்தேன், 5 நிமிடங்களுக்கு முன்புதான் இந்த போட்டி முடிந்தது. மேட்ச் பார்த்துவிட்டு நேராக மாநாட்டிற்கு வந்துவிட்டேன், இந்தியா வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி" என்று அவர் பேசினார். அவர் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Next Story