மெல்போர்ன் டெஸ்ட்: இந்திய அணிக்கு சாதகமான ஆஸ்திரேலிய அணியின் வெற்றி


மெல்போர்ன் டெஸ்ட்: இந்திய அணிக்கு சாதகமான ஆஸ்திரேலிய அணியின் வெற்றி
x

தென் ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்ததால் அந்த அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

மெல்போர்ன்,

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 182 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது. இரட்டைசதம் அடித்த டேவிட் வார்னர் ஆட்ட நாயகனாக தேர்வானார்.

பிரிஸ்பனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது. இந்த ஆட்டம் இரண்டே நாட்களில் முடிவடைந்திருந்தது.

கடைசி டெஸ்ட் போட்டி வரும் 4-ம் தேதி சிட்னியில் நடைபெறுகிறது. சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை 17 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கைப்பற்றியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்ததால் அந்த அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 50 சதவீத வெற்றி புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இதனால் இந்திய அணி 58.93 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்தில் தொடர்வதுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது. புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா 78.57 சதவீதத்துடன் முதலிடம் வகிக்கிறது.


Next Story