மே மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருது:பரிந்துரை பெயர் பட்டியலில் இடம் பெற்ற அயர்லாந்து வீரர்...!


மே மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருது:பரிந்துரை பெயர் பட்டியலில் இடம் பெற்ற அயர்லாந்து வீரர்...!
x

Image Courtesy: @ICC

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. இந்நிலையில் மேமாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்துள்ளது.

அதன்படி மே மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் ஆசம், வங்காளதேசத்தின் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ, அயர்லாந்தின் ஹாரி டெக்டர் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் மே மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு இலங்கையின் சாமரி அதபத்து, ஹர்ஷிதா மாதவி ஆகியோரும், தாய்லாந்தின் திபாட்சா புத்தாவோங் பெயரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் அதிக வாக்குகள் பெறும் வீரர் மற்றும் வீராங்கனைக்கு ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருது வழங்கப்படும்.




Related Tags :
Next Story