சென்னைக்கு எதிரான ஆட்டம்....கோலிக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் - காரணம் என்ன...?


சென்னைக்கு எதிரான ஆட்டம்....கோலிக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் - காரணம் என்ன...?
x

Image Courtesy: AFP

ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

பெங்களூரு,

ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்களை குவித்தது.

இதையடுத்து ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களை மட்டுமே எடுத்ததால் சென்னை அணி 8 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை அணி தரப்பில் கான்வே 83 ரன்னும், ஷிவம் துபே 27 பந்தில் 52 ரன்னும் குவித்தனர்.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் நடத்தை விதிகளை மீறியதற்காக ஆர்சிபி வீரர் கோலிக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அதிரடி ஆட்டட்தை வெளிப்படுத்தி வந்த ஷிவம் துபே 52 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். அவரது கேட்சை முகமது சிராஜ் பிடித்தார். இந்த கொண்டாட்டத்தை கோலி ஆக்ரோஷமாக கொண்டாடியதால் அவருக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் கூறியதாவது,

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோலிக்கு போட்டி கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் நடத்தை விதிகள் 2.2-ன் (லெவல் 1) கீழ் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.



Next Story