லக்னோ வீரர் குருனால் பாண்ட்யாவுக்கு 2-வது ஆண் குழந்தை
குருனால் பாண்ட்யா - பன்குரி சர்மா தம்பதிக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது
மும்பை,
ஐ.பி.எல். தொடரில் குருனால் பாண்ட்யா லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் குருனால் பாண்ட்யா - பன்குரி சர்மா தம்பதிக்கு கடந்த 21-ந்தேதி ஆண்குழந்தை பிறந்துள்ளது.பிறந்த குழந்தை மற்றும் தனது மனைவியுடன் இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் குருனால் பாண்ட்யா பதிவிட்டு, குழந்தையின் பெயர் வயு (Vayu) எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இந்த தம்பதிக்கு கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் கவிர் (Kavir) என்ற ஆண் குழந்தை பிறந்தது. குருனால் பாண்ட்யா மாடல் அழகியான பன்குரி சர்மாவை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story