2023 ஐ.பி.எல். சீசனுக்கான வீரர்கள் ஏலம் நிறைவு..!


2023 ஐ.பி.எல். சீசனுக்கான வீரர்கள் ஏலம் நிறைவு..!
x
தினத்தந்தி 23 Dec 2022 2:48 PM IST (Updated: 23 Dec 2022 10:25 PM IST)
t-max-icont-min-icon

ஐ.பி.எல். வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடக்கிறது

கொச்சி,

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் கழற்றிவிடப்பட்ட வீரர்களுக்குரிய இடத்தை நிரப்புவதற்காக ஐ.பி.எல். வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது

கொச்சியில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் 10 அணிகள் ரூ.167 கோடி செலவு செய்து 29 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 80 வீரர்களை ஏலத்தில் எடுக்கப்பட்டது.. 6 மணி நேரமாக நடைபெற்று வந்த ஐபிஎல் மினி ஏலம் நிறைவு பெற்றது.


Live Updates

  • 23 Dec 2022 3:38 PM IST

    ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீனை, ரூ.17.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை அணி

  • 23 Dec 2022 3:32 PM IST

    வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டரை, ரூ.5.75 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது

  • 23 Dec 2022 3:26 PM IST

    சாம் கரணை வாங்க முக்கிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நடைபெற்றது. பின்னர் சாம் கரணை ரூ.18.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் 

  • 23 Dec 2022 3:15 PM IST

    தென் ஆப்பிரிக்கா வீரர் ரைலி ரூசோவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை

  • 23 Dec 2022 3:03 PM IST

    ரஹானேவை ரூ. 50 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை அணி 

  • 23 Dec 2022 3:01 PM IST

    மயங்க் அகர்வாலை ரூ.8.25 கோடிக்கு, ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 

  • 23 Dec 2022 2:54 PM IST

    இங்கிலாந்து வீரர் ஹார்ரி புரூக்கை ரூ.13.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 

  • 23 Dec 2022 2:49 PM IST

    ஏலம் தொடங்கியதும் கேன் வில்லயம்சன் பெயர் முதலில் வாசிக்கப்பட்டது. அதன்படி அடிப்படை விலையாக ரூ.2 கோடிக்கு குஜராத் அணி அவரை ஏலத்தில் எடுத்தது 


Related Tags :
Next Story