2023 ஐ.பி.எல். சீசனுக்கான வீரர்கள் ஏலம் நிறைவு..!
ஐ.பி.எல். வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடக்கிறது
கொச்சி,
16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் கழற்றிவிடப்பட்ட வீரர்களுக்குரிய இடத்தை நிரப்புவதற்காக ஐ.பி.எல். வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது
கொச்சியில் நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில் 10 அணிகள் ரூ.167 கோடி செலவு செய்து 29 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 80 வீரர்களை ஏலத்தில் எடுக்கப்பட்டது.. 6 மணி நேரமாக நடைபெற்று வந்த ஐபிஎல் மினி ஏலம் நிறைவு பெற்றது.
Live Updates
- 23 Dec 2022 5:04 PM IST
இந்திய இளம் வீரர் சமர்த் வயாஸை, ரூ .20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
- 23 Dec 2022 5:03 PM IST
இந்திய வீரர் சன்வீர் சிங்கை,ரூ .20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது ஹைதராபாத் அணி!
- 23 Dec 2022 4:57 PM IST
இந்திய வீரர் ஷேக் ரஷீத்தை அடிப்படை விலையானரூ .20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!
- 23 Dec 2022 4:56 PM IST
இந்திய இளம் வீரர் விவ்ராந்த் சர்மாவை, ரூ .2.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
- 23 Dec 2022 4:48 PM IST
இங்கிலாந்து வீரர் ரீஸ் டாப்லியை ரூ .1.9 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பெங்களூரு அணி!
- 23 Dec 2022 4:30 PM IST
முதல் சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜாம்பாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை
- 23 Dec 2022 4:29 PM IST
முதல் சுற்று ஏலத்தில் நியூசிலாந்து வீரர் ஆடம் மில்னேவை, எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை
- 23 Dec 2022 4:28 PM IST
ஜெய்தேவ் உனத்கட்டை அடிப்படை விலையான ₹50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ அணி!
- 23 Dec 2022 4:27 PM IST
இங்கிலாந்து வீரர் ஆதில் ரஷித்-ஐ ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி