இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: விளையாடும் வீரர்களை அறிவித்த இங்கிலாந்து


இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: விளையாடும் வீரர்களை அறிவித்த  இங்கிலாந்து
x

Image : ICC 

3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

லண்டன்,

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் 2 டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

இந்த போட்டியில் விளையாடும் வீரர்களை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. இங்கிலாந்து அணி: டான் லாரன்ஸ், பென் டக்கெட், ஒல்லி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஒல்லி ஸ்டோன், ஜோஷ் ஹல், ஷோயிப் பஷீர்.


Next Story