கடைசி டி20 போட்டி; ஆறுதல் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே - தொடரை கைப்பற்றிய வங்காளதேசம்
ஜிம்பாப்வேவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் வங்காளதேச அணி கைப்பற்றியது.
டாக்கா,
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் முதல் 4 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் அந்த நான்கு ஆட்டங்களிலும் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரில் 4-0 என முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி டாக்காவில் உள்ள ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய வங்காளதேச அணி 20 ஒவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக மஹ்மத்துல்லா 54 ரன்கள் எடுத்தார். ஜிம்பாப்வே தரப்பில் பிளெசிங் முசரபானி, பிரையன் பென்னட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 158 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 158 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே தரப்பில் சிக்கந்தர் ராசா 72 ரன், பிரையன் பென்னட் 70 ரன் எடுத்தனர்.
வங்காளதேசம் தரப்பில் ஷிகிப், முகமது சைபுதீன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றிருந்தாலும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் வங்காளதேச அணி கைப்பற்றியது.