பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டி; டேரில் மிட்செல் விளையாடமாட்டார் - காரணம் என்ன..?
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.
வெல்லிங்டன்,
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இந்த அனைத்து ஆட்டங்களிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 4-0 என முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் நியூசிலாந்தின் சீனியர் வீரரான டேரில் மிட்செல் விளையாடமாட்டார் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
பணிச்சுமை காரணமாக நாளைய ஆட்டத்தில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக அணியில் ரச்சின் ரவீந்திரா சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story