இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டி : இங்கிலாந்து அணி 215 ரன்கள் குவிப்பு
இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7விக்கெட் இழப்பிற்கு 215ரன்கள் எடுத்தது
நாட்டிங்காம்,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி டி20 போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் 18 ரன்களிலும் ,ஜேசன் ராய் 27ரன்களிலும் .ஆட்டமிழந்தனர்.அடுத்து வந்த டேவிட் மலான் ,லியாம் லிவிங்ஸ்டன் இருவரும் இனைந்து சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்ட மலான் அரைசதம் அடித்தார்.அதன்பிறகு இருவரும் இந்திய அணியின் பந்துவீச்சை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்டார்.
சிறப்பாக விளையாடிய மலான் 39 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.தொடர்ந்து லிவிங்ஸ்டன் அதிரடி காட்ட இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்தது.தொடர்ந்து 216 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடுகிறது.