கடைசி ஒரு நாள் போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி


கடைசி ஒரு நாள் போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி
x

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கராச்சி,

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடந்தது. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 49.3 ஓவர்களில் 299 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

வில் யங் (87 ரன்), கேப்டன் டாம் லாதம் (59 ரன்) ஆகியோர் அரைசதம் அடித்தனர். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம் (1 ரன்), துணை கேப்டன் முகமது ரிஸ்வான் (9 ரன்) ஒற்றை இலக்கத்துடன் வெளியேறியதால் தகிடுதத்தம் போட்டது.

மிடில் வரிசையில் இப்திகர் அகமது (94 ரன், நாட்-அவுட், 8 பவுண்டரி, 2 சிக்சர்) கடைசி வரை மல்லுக்கட்டியும் பலன் இல்லை. பாகிஸ்தான் அணி 46.1 ஓவர்களில் 252 ரன்களுக்கு அடங்கியது. இதன் மூலம் நியூசிலாந்து 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வேகப்பந்து வீச்சாளர் ஹென்றி ஷிப்லி, சுழற்பந்து வீச்சாளர் ரச்சின் ரவீந்திரா தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். நியூசிலாந்துக்கு இது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. ஏனெனில் தொடரை 4-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றி விட்டது.


Next Story