கோலி, ரோகித் அல்ல... அந்த வீரர் எங்கள் பவுலர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார் - நாதன் லயன்


கோலி, ரோகித் அல்ல... அந்த வீரர் எங்கள் பவுலர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார் - நாதன் லயன்
x

image courtesy; twitter/@BCCI

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர் கவாஸ்கர் டிராபி) ஆட உள்ளது. இந்த தொடர் நவம்பர் 22ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 7ம் தேதி வரை நடைபெற உள்ளது.

கடைசியாக நடைபெற்ற 4 பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தி உள்ளது. அதில் 2 முறை ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்தி உள்ளது. இந்நிலையில் எதிர்வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் இந்தியா உள்ளது.

மறுபுறம் இந்தியாவை இம்முறை தோற்கடிக்க முழு வீச்சில் தயாராகும் ஆஸ்திரேலியாவுக்கு வழக்கம் போல விராட் கோலி சவாலை கொடுப்பார் என்று நம்பப்படுகிறது. ஆனால் இந்த முறை விராட், ரோகித் சர்மாவை விட இளம் வீரர் ஜெய்ஸ்வால் எங்கள் பந்துவீச்சாளர்களுக்கு கடும் சவாலை கொடுப்பார் எனவும், அவரை சாய்க்க இப்போதே திட்டங்களை வகுத்து வருவதாகவும் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஜெய்ஸ்வாலுக்கு எதிராக இன்னும் நான் விளையாடவில்லை. ஆனால் (அவருக்கு எதிராக விளையாடுவது) அது எங்கள் பவுலர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். இங்கிலாந்துக்கு எதிராக அவர் விளையாடிய விதத்தை நான் நெருக்கமாக பார்த்தேன். அது அற்புதமாக இருந்தது.

அத்தொடரில் ஜெய்ஸ்வால் பல்வேறு வழிகளில் விளையாடியதைப் பற்றி நான் டாம் ஹார்ட்லியிடம் (இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர்) பேசினேன். அது கொஞ்சம் ஆர்வமாக இருந்தது. அப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் அறியாதவற்றை பற்றி பேசுவதற்கு நான் எப்போதும் விரும்புவேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story