நடிகை அதியாவை கரம்பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்..!
நடிகை அதியாவும் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலும் இன்று திருமணம் செய்துகொண்டனர்.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல். இவரும் இந்தி நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும் நடிகையுமான அதியாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
தொடக்கத்தில் வெளிநாடுகளுக்கு ஜோடியாக சுற்றுலா செல்வது, நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என இருந்து வந்த ராகுல் -அதியா ஷெட்டி ஜோடி கடந்த ஆண்டு தாங்கள் காதலிப்பதை உறுதி செய்தனர். இவர்களின் திருமணம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், கே.எல்.ராகுலுக்கும் அதியாவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. மராட்டியத்தில் உள்ள சுனில் ஷெட்டியின் பண்ணை வீட்டில் இன்று திருமணம் நடைபெற்றது.
மணமக்களின் இரு வீட்டார் மட்டும் இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். புதுமண தம்பதி கே.எல்.ராகுல் - அதியாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story