'காவிரி கர்நாடகத்தின் சொத்து' - இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்


காவிரி கர்நாடகத்தின் சொத்து - இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்
x
தினத்தந்தி 26 Sept 2023 8:54 AM IST (Updated: 26 Sept 2023 2:12 PM IST)
t-max-icont-min-icon

காவிரி போராட்டத்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்து கர்நாடகம் முழுவதும் விவசாய அமைப்பினர், கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக காவிரியின் மையப்பகுதியான மண்டியா மற்றும் மைசூரு மாவட்டங்களில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து இன்று (செவ்வாய்க்கிழமை) பெங்களூருவில் முழுஅடைப்பு போராட்டம் நடக்க உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நடிகர், நடிகைகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான கர்நாடகத்தை சேர்ந்த கே.எல்.ராகுலும் காவிரி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக கே.எல்.ராகுல் தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:- 'காவிரி எப்போதும் நமதே (கர்நாடகம்), காவிரி கர்நாடகத்தில் உற்பத்தியாகி அதிகளவு தண்ணீர் இங்கு குவிகிறது. ஆனால் அந்த தண்ணீரை பயன்படுத்த ஒவ்வொரு ஆண்டும் கன்னடர்கள் சட்ட போராட்டத்துடன் வீதியில் இறங்கி போராட வேண்டியுள்ளது. இதுதான் எங்களின் சோகம். காவிரி முழு கர்நாடகத்தின் சொத்து' என பதிவிட்டுள்ளார்.

கே.எல்.ராகுலின் இந்த பதிவுக்கு கன்னடர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.


Next Story