ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்: முதலாவது அரையிறுதியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா நாளை மோதல்


ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்: முதலாவது அரையிறுதியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா நாளை மோதல்
x

Image Courtesy: @BCCI

15-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.

பினோனி,

15-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடரில் லீக் சுற்று மற்றும் சூப்பர் சிக்ஸ் சுற்று ஆட்டம் முடிவடைந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

இந்த போட்டி தொடரில் பினோனியில் நாளை நடைபெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் தோல்வியையே சந்திக்காத இந்திய அணி அரையிறுதில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது.

அதேவேளையில் சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தென் ஆப்பிரிக்கா ஆட உள்ளது. இதனால் இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் நாளை மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இதையடுத்து 8-ந் தேதி நடைபெறும் 2-வது அரைஇறுதியில் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.



Next Story