ஜூனியர் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட்: புதூர் அரசு பள்ளி வெற்றி
நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் புதூர் அரசு பள்ளி அணி, டான் போஸ்கோ பள்ளி அணியை எதிர்கொண்டது.
சென்னை,
இந்தியா சிமெண்ட்ஸ் ஆதரவுடன் பள்ளிகளுக்கு இடையிலான 8-வது ஜூனியர் சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னையில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் புதூர் அரசு பள்ளி அணி, டான் போஸ்கோ பள்ளி அணியை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த டான் போஸ்கோ அணி 99 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அடுத்து ஆடிய புதூர் அரசு பள்ளி அணி 16.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதூர் அரசு பள்ளி அணி வெற்றி பெற்றது.
மற்ற ஆட்டங்களில் ஹோலி கிராஸ் சேலம், நெல்லை நாடார் பள்ளி, மதுரை கிரேஸ் பள்ளி அணிகளும் வெற்றி பெற்றன.
Related Tags :
Next Story