இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் தோல்வி: இந்திய கேப்டன் ரோகித் கூறியது என்ன?


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் தோல்வி: இந்திய கேப்டன் ரோகித் கூறியது என்ன?
x

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.

ஐதராபாத்,

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது.

இதில், முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 436 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் 190 ரன்கள் பின் தங்கிய நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 420 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து, 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஆனால், இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், முதல் டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.

இந்நிலையில், போட்டிக்கு பின் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டி போட்டியில் தோல்வியடைந்தது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ரோகித் சர்மா, எங்கு தவறு நடந்தது என்று சுட்டிக்காட்டுவது மிகவும் கடினமானது. முதல் இன்னிங்சில் 190 ரன்கள் முன்னிலை பெற்றதும் நாங்கள் பேட்டிங்கில் சிறப்பாக உள்ளோம் என நினைத்தோம். இங்கிலாந்து வீரர் ஆலி போப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய மண்ணில் வெளிநாட்டு வீரர் ஆடிய மிகச்சிறந்த ஆட்டம் அது. நாங்கள் சரியான இடத்தில் பந்துவீசினோம். திட்டங்களை பந்துவீச்சாளர்கள் சரியாக செயல்படுத்தினர். ஆனால், ஆலி போப் சிறப்பாக ஆடினார் என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். ஒரு அணியாக நாங்கள் தோல்வியடைந்துள்ளோம். நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை. சிராஜ், பும்ரா இருவரும் ஆட்டத்தை 5வது நாளுக்கு கொண்டுசெல்ல வேண்டுமென நான் விரும்பினேன். பின்வரிசை வீரர்கள் கடுமையாக போராடினர். நீங்கள் தைரியமாக இருக்கவேண்டும். ஆனால் நாங்கள் அவ்வாறு இல்லை என நான் நினைக்கிறேன்' என்றார்.


Next Story