உலகக்கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி...!


உலகக்கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி...!
x
தினத்தந்தி 5 Nov 2023 2:31 PM IST (Updated: 5 Nov 2023 8:46 PM IST)
t-max-icont-min-icon

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

கொல்கத்தா,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய 37வது லீக் ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதின. கொல்கத்தாவில் உள்ள ஈடன்காடன் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

Live Updates

  • 5 Nov 2023 5:43 PM IST

    இந்தியா 300 ரன்கள் குவிப்பு

    இந்தியா 48 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்துள்ளது. கோலி 99 ரன்களுடனும், ஜடேஜா 6 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்

  • 5 Nov 2023 5:40 PM IST

    47 ஓவர்கள் முடிவு

    இந்தியா 47 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்கள் குவித்துள்ளது. கோலி 97 ரன்களுடனும், ஜடேஜா 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்

  • 5 Nov 2023 5:35 PM IST

    சூர்யகுமார் 22 ரன்னில் அவுட்

    13 பந்துகளில் 5 பவுண்டரிகள் உள்பட 22 ரன்கள் எடுத்திருந்த சூர்யகுமார் கீப்பர் கேட்ச் மூலம் அவுட் ஆனார். தற்போதைய நிலவரப்படி, இந்தியா 46 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்துள்ளது.

  • 5 Nov 2023 5:19 PM IST

    250 ரன்களை கடந்த இந்தியா..!

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 43 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் குவித்துள்ளது. கோலி 78 ரன்களுடனும், சூர்யகுமார் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்

  • 5 Nov 2023 5:15 PM IST

    கேஎல் ராகுல் 8 ரன்னில் அவுட்

    16 பந்துகளில் 8 ரன்கள் எடுத்திருந்த கேஎல் ராகுல் கேட்ச் மூலம் அவுட் ஆனார். தற்போதைய நிலவரப்படி, இந்தியா 42 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்துள்ளது.

  • 5 Nov 2023 5:03 PM IST

    40 ஓவர்கள் முடிவில் இந்தியா 239 ரன்கள் சேர்ப்பு

    40 ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 75 ரன்களுடனும், கேஎல் ராகுல் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

  • 5 Nov 2023 4:45 PM IST

    ஸ்ரேயாஸ் 77 ரன்னில் அவுட்

    87 பந்துகளில் 77 ரன்கள் குவித்த ஸ்ரேயாஸ் கேட்ச் மூலம் அவுட் ஆனார். தற்போதைய நிலவரப்படி இந்தியா 36.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்துள்ளது.

  • 5 Nov 2023 4:36 PM IST

     35 ஓவர்கள் முடிவு

    35 ஓவர்கள் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 67 ரன்களுடனும், ஸ்ரேயாஸ் 70 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

  • 5 Nov 2023 4:14 PM IST

    ஸ்ரேயாஸ் அரைசதம் விளாசல்

    தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் அரைசதம் விளாசினார். அவர் 66 பந்துகளில் 5 பவுண்டரி, 1 சிக்சர் உள்பட 55 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

  • 5 Nov 2023 4:10 PM IST

    30 ஓவர்கள் முடிவில் இந்தியா 179 ரன்கள் சேர்ப்பு

    30 ஓவர் முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 54 ரன்களுடனும், ஸ்ரேயாஸ் 47 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.


Next Story