மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு


மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
x

image courtesy: twitter/ @ICC

மகளிர் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

8 அணிகள் இடையிலான 9-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்தியா ஏ பிரிவில் பாகிஸ்தான், நேபாளம் மற்றும் யு.ஏ.இ. அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது. இதனையடுத்து 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் யு.ஏ.இ. மற்றும் நேபாளம் அணிகளை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாகவும், மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி விவரம் பின்வருமாறு:-

ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், உமா செத்ரி, பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா யாதவ், ஷ்ரேயங்கா பட்டில், சஜனா சஜீவன்

ரிசர்வ் வீராங்கனைகள்: ஸ்வேதா செராவத், சைகா இஷாக், தனுஜா கன்வர், மேக்னா சிங்


Next Story