ஆசியக் கோப்பை 2023: ஒரே குழுவில் இந்தியா- பாகிஸ்தான்; 2 ஆண்டுகளுக்கான கிரிக்கெட் போட்டிகள் முழு விவரம்


ஆசியக் கோப்பை 2023: ஒரே குழுவில் இந்தியா- பாகிஸ்தான்; 2 ஆண்டுகளுக்கான கிரிக்கெட் போட்டிகள் முழு விவரம்
x
தினத்தந்தி 5 Jan 2023 3:59 PM IST (Updated: 5 Jan 2023 4:00 PM IST)
t-max-icont-min-icon

ஆசியக் கோப்பை 2023க்கான ஒரே குழுவில் இந்தியாவும் பாகிஸ்தானும் இடம் பெற்று உள்ளன. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான கிரிக்கெட் காலண்டரை வெளியிட்டு உள்ளது.

புதுடெல்லி:

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான காலண்டரை வெளீயிட்டு உள்ளது.2023 ஆசியக் கோப்பைக்கான இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே குழுவில் உள்ளன என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) தலைவர் ஜெய் ஷா வியாழக்கிழமை உறுதிப்படுத்தினார்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவருமான ஜெய் ஷா, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான கவுன்சிலின் கிரிக்கெட் காலண்டர் மற்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆசிய கோப்பைக்கு தகுதி பெறுவதற்கான பாதை கட்டமைப்பை அறிவித்து உள்ளார்.

"2023 & 2024க்கான பாதை அமைப்பு மற்றும் கிரிக்கெட் காலண்டர்களை வழங்குகிறோம்! இது இந்த விளையாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான எங்களின் ஈடு இணையற்ற முயற்சிகள் மற்றும் ஆர்வத்தை உணர்த்துகிறது என ஏசிசி கூறி உள்ளது.

ஆசிய கோப்பை 2023 இந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்க உள்ள நிலையில், பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த ஆண்டு கிரிக்கெட் மைதானத்தில் மீண்டும் கடுமையான மோதலை சந்திக்கும்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் ஒரே குழுவில் இருப்பதால், பரம-எதிரிகள் மீண்டும் களமிறங்குவார்கள், இது கிரிக்கெட் பிரியர்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுக்கும்.

ஆசிய கோப்பை 2023 இல் 6 அணிகள் விரும்பப்படும் கோப்பைக்காக போட்டியிடும் மற்றும் போட்டியில் மொத்தம் 13 போட்டிகள் இருக்கும். மொத்தம் 6 லீக் ஆட்டங்கள் & சூப்பர் 4 ஆட்டங்கள் நடைபெறும், அதைத் தொடர்ந்து இறுதிப் போட்டியும் நடைபெறும்.

புதிய நாட்காட்டியின்படி, 10 அணிகள் பங்கு பெறும் 2023 ஆண்கள் சேலஞ்சர்ஸ் கோப்பை ஒருநாள் போட்டியுடன் தொடங்கும்.

இந்தப் போட்டியில் பஹ்ரைன், சவுதி அரேபியா, பூடான், சீனா, மியான்மர், மாலத்தீவு, தாய்லாந்து மற்றும் ஈரான் ஆகிய (ரண்டு அணிகள் இன்னும் பெயரிடப்படவில்லை) 10 அணிகள் பங்கேற்கின்றன.

இதில் தலா ஐந்து அணிகள் கொண்ட இரண்டு குழுக்கள் இருக்கும். மொத்தம் 23 போட்டிகள் நடைபெறும்.

மார்ச் மாதம், 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான மண்டலப் போட்டி நடைபெறும். இந்தப் போட்டியில் மண்டல வாரியாக எட்டு அணிகள் பங்கேற்கும்.

மேற்கூறிய ஆடவர் சேலஞ்சர்ஸ் கோப்பையின் வெற்றியாளர்கள் மற்றும் இரண்டாம் இடத்தைப் பெறுபவர்கள் ஒருநாள் போட்டியான ஆண்கள் பிரீமியர் கோப்பைக்கு தகுதி பெறுவார்கள். இந்த போட்டி ஏப்ரல் மாதம் நடைபெறும் மொத்தம் 24 போட்டிகள் நடைபெறும்.

ஐந்து போட்டிகள் கொண்ட இரண்டு குழுக்களாக பத்து அணிகள் பிரிக்கப்படும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நேபாளம், குவைத், கத்தார், ஓமன், ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய அணிகள் போட்டிக்கு உறுதி செய்யப்பட்டுள்ளன.

ஜூன் மாதம், மகளிர் 20 ஓவர் வளர்ந்து வரும் அணிகள் ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் எட்டு அணிகள் தலா இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டி நடைபெறும். ஒரு குழுவில் இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ, தாய்லாந்து மற்றும் ஹாங்காங் இடம்பெறும். மற்றைய குழுவில் இலங்கை ஏ, வங்காளதேச ஏ, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மலேசியா போன்ற அணிகள் இருக்கும்.

அடுத்ததாக, 50 ஓவர்கள் கொண்ட ஆசியக் கோப்பை ஆண்கள் வளர்ந்து வரும் அணிகள் போட்டிகள் நடைபெறும் . இந்தப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள் இந்தப் போட்டிக்கு தகுதி பெறும்.

இந்தப் போட்டியில் தலா நான்கு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படடும். முதல் குழுவில் இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ, இலங்கை ஏ மற்றும் தகுதிச் சுற்று 1. மற்றைய குழுவில் ஆப்கானிஸ்தான் ஏ, வங்கதேசம் ஏ மற்றும் குவாலிபையர் 2 மற்றும் 3 ஆகிய அணிகள் பங்கேற்கும். இந்த போட்டியில் 15 போட்டிகள் நடைபெறும்.

ஆகஸ்டில், ஆண்களுக்கான எல்2 பயிற்சி வகுப்பும், பயிற்சி பட்டறையும் நடைபெறும்.

ஏசிசியின் முக்கிய போட்டியான ஆடவர் ஆசிய கோப்பை செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதில் ஆறு அணிகள் இடம்பெறும், மூன்று அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் குவாலிபையர் 1 (ஆண்களுக்கான பிரீமியர் கோப்பை வென்றவர்கள்) ஒரு குழுவில் இடம்பெறுவர். இலங்கை, வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் மற்றுமொரு குழுவில் உள்ளன. இந்தப் போட்டியில் மொத்தம் 13 போட்டிகள் நடைபெறவுள்ளன.

அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும். 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான சேலஞ்சர்ஸ் கோப்பை அக்டோபரில் தொடங்கும். இந்தப் போட்டியில் 10 போட்டிகள் இடம்பெறும் மற்றும் தலா ஐந்து அணிகள் கொண்ட குழுவாக பிரிக்கப்படும். முதல் குழுவில் பஹ்ரைன், சவூதி அரேபியா, பூடான், சீனா மற்றும் ஒரு தகுதிச் சுற்று அணி. மற்ற குழுவில் மியான்மர், மாலத்தீவு, தாய்லாந்து, ஈரான் மற்றும் குவாலிபர் 2 அணிகள் இருக்கும்.

பத்து அணிகள் பங்கேற்கும் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பிரீமியர் கோப்பை நவம்பர் மாதம் நடைபெறும். முதல் குழுவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், நேபாளம், கத்தார் மற்றும் தகுதிச் சுற்று 1. அடுத்த குழுவில் ஓமன், ஹாங்காங், சிங்கப்பூர், மலேசியா மற்றும் இரண்டாவது தகுதிச் சுற்று. இதில் சேலஞ்சர்ஸ் கோப்பை வெற்றியாளர் இடம்பெறுவார்.

டிசம்பரில் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை நடைபெறும்

2024 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஆண்கள் 20 ஓவர் சேலஞ்சர் கோப்பை மற்றும் மார்ச் மாதம் பெண்கள் 20 ஓவர் சேலஞ்சர் கோப்பையுடன் தொடங்கும். ஆடவர் போட்டியில் ஆசிய கிரிக்கெட்டின் இணை அணிகள் 14 முதல் 23 வரையிலும், ஒன்பதிலிருந்து 18 வரை உள்ள இணை அணிகள் பெண்கள் போட்டியில் பங்கேற்கும்.

இந்தப் போட்டியில் வெற்றி பெறுவோர் மற்றும் இரண்டாம் இடத்தைப் பெறுபவர்கள் முறையே ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் 20 ஓவர் பிரீமியர் கோப்பைக்கு தகுதி பெறுவார்கள். ஆண்கள் போட்டியில் 10 அணிகள் இருக்கும், அனைத்து இணை அணிகளும் தகுதிப் போட்டிகளுடன் 6-13 முதல் தரவரிசையில் இருக்கும். பெண்கள் போட்டியில் ஆறு அணிகள், ஐந்து முதல் எட்டு வரையிலான இணை அணிகள் மற்றும் இரண்டு தகுதிச் சுற்றுகள் இடம்பெறும்.

ஆகஸ்டில், ஆண்களுக்கான எல்3 பயிற்சி வகுப்பும், கியூரேட்டர்கள் பட்டறையும் நடைபெறும்.

செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில், மகளிர் 20 ஓவர் ஆசியக் கோப்பை மற்றும் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெறும். மகளிர் பிரிமியர் கோப்பையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 20 ஓவர் ஆசிய கோப்பையில் இணையும். இதில் 16 போட்டிகள் மற்றும் ஆறு அணிகள், தலா மூன்று பேர் கொண்ட இரண்டு குழுக்களாக பிரிக்கப்படும். இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் ஒரு குழுவிலும், மற்றைய குழுவில் இலங்கை மற்றும் இரண்டு தகுதிச் சுற்றுப் போட்டிகள் இடம்பெறும்.

அக்டோபரில் நடக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பையில் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. ஒரு குழுவில் இந்தியா, பாகிஸ்தான், குவாலிபர் 1 மற்றும் 2 அணிகளும், மற்றொரு குழுவில் வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் குவாலிபையர் 3 அணிகளும் பங்கேற்கும்.

ஆடவர் 20 ஓஅவ்ர் வளர்ந்து வரும் அணிகள் ஆசிய கோப்பை நவம்பர் மாதம் நடுவர்கள் பட்டறைக்குப் பிறகு டிசம்பரில் நடைபெறும். இந்தப் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட பிரீமியர் கோப்பையில் முதல் மூன்று அணிகள் மற்றும் மொத்தம் எட்டு அணிகள், நான்கு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படும். இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ, இலங்கை ஏ மற்றும் தகுதிச் சுற்று 1. மற்ற குழுவில் வாங்காள தேசம் ஏ, ஆப்கானிஸ்தான் ஏ மற்றும் தகுதிச் சுற்று 2 மற்றும் 3 ஆகியவை இடம்பெறும்.


Next Story