டி20 கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த இந்தியா


டி20 கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த இந்தியா
x

image courtesy: twitter/@BCCI

ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 234 ரன்கள் குவித்தது.

ஹராரே,

இந்தியா - ஜிம்பாப்வே இடையிலான 2வது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி முதலி ல் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 100 ரன்கள் அடித்தார். ஜிம்பாப்வே தரப்பில் முசரபானி, மசகட்சா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி விளையாடி வருகிறது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் 10 ஓவர்களில் வெறும் 74 ரன்கள் மட்டுமே அடித்தது. ஆனால் கடைசி 10 ஓவர்களில் 160 ரன்கள் குவித்தது.

இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் கடைசி 10 ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற மாபெரும் சாதனையை இந்தியா படைத்துள்ளது.

அந்த பட்டியல்:-

1. இந்தியா - 160 ரன்கள்

2. இலங்கை - 159 ரன்கள்

3. ஆப்கானிஸ்தான் - 156 ரன்கள்

4. நியூசிலாந்து - 154 ரன்கள்


Next Story